கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அப்துல்லா மஹரூப் எம்.பி. பொலிசாருக்கு எதிராக கருத்து!!!



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல பொலிஸ் பிரிவினரால் அப்பாவி மக்கள் மீது அபாண்டத்தை சுமத்தி பொய் வழக்குகளை பதிவு செய்வதை உரிய பொலிஸ் பொறுப்பதிகாரி தடுக்க வேண்டும் .
விறகுகளை எடுப்போர் மீது அவர்களை கைது செய்து கஞ்சா வழக்கு பதிவு செய்வதனாலும் அப்பாவி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹரூப் நேற்று செவ்வாய்க் கிழமை (28) கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தெரிவித்தார்.

அக் கூட்டத்தில் கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான துரைரட்ணசிங்கம், இம்ரான் மஹரூப்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,கிண்ணியா நகர சபை , பிரதேச சபைஉள்ளூராட்சி மன்ற தலைவர்கள்,உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
கிண்ணியாவில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இது அதிகரித்துள்ளது. குறிப்பாக விறகுகளை எடுத்துச் செல்வோர் மீது பொய்யான வழக்குகளை வான்எல பொலிஸ் பிரிவு பகுதியில் அப்பாவி ஏழை மக்கள் மீது வீணாண அபாண்டத்தை சுமத்தி கஞ்சா வழக்கு பதிவு செய்வதனால் இப் போதை பழக்கம் அதிகரிக்கிறது போல் புள்ளி விபரம் மூலமாக தெரிகிறது.

இதனை உரிய பொலிஸ் பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இது தவிர கிண்ணியாவில் உள்ள பல பிரச்சினைகள் காணப்படுகின்றது கிண்ணியா தம்பலகாம வீதிக்குட்பட்ட வீதிகளில் மண் டிப்பர் வாகன விபத்துக்களினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகிறது.

இது கந்தளாய் தொடக்கம் கலேவல வரை தொடருகிறது வேகக் கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை ஆராய வேண்டியுள்ளது.

மண் டிப்பர்களால் மண்கள் குறித்த பகுதியை அல்லாது வேறு வகையான முறைகளை பயன்படுத்தி மண் அகழ்வுகள் இடம் பெறுகிறது 200 டிப்பர்களுக்கான அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெற்றதை கொண்டு மேலும் அதை வைத்து 450 டிப்பர்கள் மண்களை ஏற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை பொலிஸார் கண்காணித்து அவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு அனுமதிப் பத்திரம் ஒரு முறையே பயன்படுத்த வேண்டும்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியுடன் கிண்ணியா நகர சபை பகுதி பாரிய லகூன் சிடியாக மாற்றப்படவுள்ளது .

இதற்கான பாரிய திட்டங்களை கிண்ணியா நகர சபை பகுதிகளில் மேற்கொள்ளவிருக்கிறோம்.இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை தவிசாளர் தலைமையிலான குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -