முசலி பிரதேச சபைக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனால் 52.8 மில்லியன் நிதியொதுக்கீடு

சப்னி அஹமட்-
முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கியுள்ளதாக மன்னார், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்திற்கு பின் அபிவிருத்தியை கண்டு வரும் வடக்கு மாகாணம் இம்முறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக முசலி பிரதேசத்திற்கு பொருளாதார, சமூக செயற்பாடுகளில் அதிக அக்கறையுடன் அமைச் செயற்பட்டுவருகின்றார். முழு வடக்கு மாவட்டத்திற்கு முடிந்தளவு நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சு ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை இலங்கை முழுவது செயற்படுத்தி வருகின்றார்.

அதனடியப்படையில் கைத்தொழில் வர்தக அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கென பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இன பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்து பிரதேசத்திற்கும் சமமாக நிதி ஒதுக்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை தனது அமைச்சின் விசேட செயற்த்திட்டத்தின் கீழ் குறித்த நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உப தவிசாளர் தெரிவித்தார்.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் முசலி பிரதேசத்தில் உள்ள உள்ளக வீதிகள் அபிவிருத்தி, தெருவிளக்குகள் இடும் நடவடிக்கை, மைதான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -