புத்தளம் மக்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்… நகரபிதா கே.ஏ.பாயிஸ்

எம்.எல்.லாபிர்-
ண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே புத்தளம் நகரசபையின் தவிசாளர் கௌரவ கே.ஏ.பாயிஸ் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள், அவர் மேலும் குறிப்பிடுகையில்

யாழ்ப்பாணத்திலிருந்தும், முல்லைத்தீவிலிருந்தும் அனுராதபுரம் ஊடாக புத்தளத்திற்கு வருகை தந்த மக்களையும், மன்னாரிலிருந்து இலவன்குளம் ஊடாக புத்தளத்திற்கு வந்த மக்களையும் புத்தளத்து மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி வரவேற்று அடைக்கலம் கொடுத்தார்கள், அபோது எனக்கு 17 வயதுதான், நானும் ஒரு மாணவனாக அந்த மக்களுக்கான உதவி ஒத்தாசைகளை அப்போது வழங்கியிருந்தேன், ஆனால் பிரச்சினை நீடித்தது, இப்போது 25 வருடங்களையும் கடந்து அந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிட்டவில்லை. அகதி மக்கள் புத்தளத்து மக்காளிகிய எங்களது வாழ்வில் இரண்டரக் கலந்துவிட்டார்கள்.

அனுராதபுரம் வீதியில் நிந்தனி போன்ற இடங்களாகட்டும், கொழும்புவீதியில் பாலவியையும் தாண்டி நாகவில்லு போன்ற இடங்களாகட்டும், கற்பிட்டி வீதியில் கற்பிட்டி நகர்வகையான பிரதேசங்களாகும் தரிசு நிலங்களை நோக்கி அந்த மக்களை நாங்களை குடியேற்றினோம். பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களுடைய தீர்க்கமான சிந்தனையின் விளைவாக புனர்வாழ்வு அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன், முழு மூச்சாக அந்த மக்களின் குடியேற்றங்களுக்கு நாங்கள் உதவி செய்தோம். அரசியல்வாதிகள் எப்போதுமே வாக்குப்பலத்தையே பார்ப்பார்கள்; எவரிடத்திலாவது வாக்கு வங்கி இருக்கின்றது என்றால் அவர்களுக்குக் கூடுதல் கவனம் கொடுப்பார்கள், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் விடயத்திலும் அதுவே நடந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களுடைய வழிகாட்டலில் அந்த மக்களுக்கு பாடசாலைகளை அமைத்தது, தொழில் நிலையங்களை அமைத்தது, வீடுகளை அமைத்தது இப்படியாக பல்வேறு முன்னேற்றகரமாக நிலைமைகள் அந்த மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மக்களின் வாக்குப்பலத்தை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரித்து வேறு கட்சிகளுக்கு விற்பதற்கான சதித்திட்டங்கள் நடந்தேறின. அப்போதும் அரசியல் ரீதியாக முரண்பாடுகள் ஏற்பட்டபோதும் அந்த மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

இப்போது நிலைமைகள் மாற்றமடைந்திருக்கின்றன; ஒருசிலர் இங்கே மீளவும் குடியேறியிருக்கின்றீர்கள், இன்னும் சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் பலர் எம்மோடு இணைந்து செயலாற்றுகின்றார்கள். அது மகிழ்வான விடயமாகும். அரசியலில் எமது மக்கள் தூரநோக்கோடு செயற்படவேண்டும் என்பதுதான் பெருதலைவர் அஷ்ரப் அவர்கள் எமக்குக் கற்றுத்தந்த பாடமாகும்.

இன்று யாழ்ப்பாணத்திலே புத்தளம் முஸ்லிம் மக்களை அனைவரையும் கௌரவிக்கும் வகையில் புத்தளத்தின் மக்கள் பிரதிநிதியாக என்னை அழைத்து நீங்கள் தருகின்ற கௌரவம் மிகவும் வரவேற்கப்படவேண்டியதாகும். எனது நல்ல நண்பரும், உங்களது வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ.அய்யூப் அஸ்மின் அவர்கள் என்னை அழைத்தபோது இவ்வளவு பிரமாண்டமான கௌரவிப்பாக இது இருக்கும் என்று நான் கருதியிருக்கவில்லை. அவர் தூரநோக்கோடு செயலாற்றுகின்றார்.

புத்தளம் மண்ணும், புத்தளத்து மக்களும் உங்களை எப்போதும் வரவேற்பார்கள், அது உங்களுக்கு இன்னுமொரு வீடு, புத்தளத்து மக்களின் வரலாற்றில் புத்தளத்து மக்கள் வெளியில் அழைத்துக் கௌரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும், இது ஒரு வரலாற்று நிகழ்வாகும், உங்களது கௌரவிப்புக்களை அனுசரணைகளை நான் எனது மக்களோடு பகிர்ந்துகொள்வேன். புத்தளம் உங்களுக்கும் உரியது. நன்றி என்று கூறி விடைபெற்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -