திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் வெற்றிடம் நிலவும் அதிபர் பதவிக்கு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த எம்.எம்.முஹமட் அப்பாஸ் என்பவரை அதிபராக நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை தொடர்பான மகஜரொன்றினை இன்று (இருபத்தாறாம் திகதி) ஜனாதிபதியின் மூதூர் பிரதேச பிரதிநிதி ஏ.ஆர்.இத்ரீஸ், மூதூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உதவித்தலைவர் எம்.ஏ.றஹீம் மற்றும் மூதூர் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் கையளித்தனர்.
இம்மஜரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ள ஊழல்,மோசடிகள் மற்றும் கடமை துஷ்பிரயோக நடவடிக்கைகளை உடனடியாக விசாரணை செய்யுமாறும் இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பிரதிநிதியும்,மூதூர் பிரதேச சபையின் முன்னாள் விஷேட ஆணையாளருமான தேசபந்து அத்யபன கீர்த்தி ஏ.ஆர்.இத்ரீஸ் மற்றும் மூதூர் பிரதேச பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் உதவி தலைவரும்,சிறாஜிய பள்ளி தலைவருமான அல்ஹாஜ் எம். ஏ..ரஹீம் ஆகியோர்களால் விடுத்த வேண்டுகோளுக்கே இவ்வாரத்திற்குள் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.