Mohamed Nizous
இந்த வாழ்க்கையில்
எதுவும் கடந்து போகும்
பந்து போல் சுற்றி வரும்
பள்ளமும் மேடும்
எந்தவொரு செயலும்
இல்லை நிரந்தரம்
முந்தியோர் சொன்னவை
முற்றிலும் உண்மை
பிறந்து வளர்வதும்
பின்னர் தளர்வதும்
பறந்து திரிவதும்
அறுந்து முறிவதும்
திறந்த வாசல்கள்
திரும்ப மூடுவதும்
நிரந்தரம் எதுவுமில்லை
நீர்த்துளி வாழ்க்கை
வந்த மகிழ்ச்சிகள்
வாழ்க்கையில் நிலைக்காது
நொந்து அழுவதும்
நூறு நாள் தாண்டாது
பந்தா செய்வதும்
பயந்து தொய்வதும்
எந்தப் பயனுமில்லை
எதுவும் கடந்து போகும்.
பத்து வருடம் முன்னாால்
பதற வைத்தவைகள்
அத்தனை அளவு தூரம்
ஆட்டவில்லை இன்று
மொத்த மகிழ்வாய் இன்று
முன்னிருக்கும் சம்பவங்கள்
அத்தனை மகிழ்வு தராது
ஐந்தாறு ஆண்டு பின்னால்
ஒற்றை வரியில் சொல்வதானால்
ஒவ்வொன்றும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
என்று புரிந்து கொண்டால்
எதுவும் வாழ்க்கையின்
இயல்பை மாற்றாது
நதியின் வழியில்
நாடும் காடும்
விதியின் வழியில்
விருப்பும் வெறுப்பும்
பொதுவாய் இருக்கும்.
புரிந்தவர் உயர்ந்தார்