உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 71 ஆவது உயர்மட்ட மாநாடு ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த மாதம் இரண்டாம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்நோக்கி வரும் சுகாதார சவால்கள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான பல தீர்மானங்கள் இம்மாநாட்டின் இறுதியில் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பைசல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் கலந்துகொண்டிருக்கும் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -