பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதுள்ள முன்பள்ளிகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை


ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
சிறுவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதுள்ள முன்பள்ளிகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் செயலாற்றுப்பணி;ப்பாளர் எஸ். சசிகரன் தெரிவித்துள்ளார்.
சிறந்தமுறையில் சுத்தம், சுகாதாரம் பேணாத மற்றும் சிறுவர்களுக்குப்பொருத்தமான சுற்றாடலைக் கொண்டிருக்காத முன்பள்ளிகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்;தில் 634 முன்பள்ளிக்கூடங்கள் இயங்குவதாகவும் இங்கு 1344 ஆசிரியர்கள் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செங்கலடி- ஜெரோம்ஸ் முன்பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலதின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் செயலாற்றுப்பணி;ப்பாளர் எஸ். சசிகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இப்பாடசாலையின் பணிப்பாளர் அருட்தந்தை ஜி. மகிமைதாஸ் பிரதிப்பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் குயின்டஸ் , அருட் சகோதரிகள் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் களஉத்தியோகத்தர் வீ.கயல்விழி உட்பட பலரும் இந்நிகழ்வி;ல் கலந்துகொண்டனர்.

சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.

செயலாற்றுப்பணிப்பாளர் சசிகரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - மட்டக்களப்பு மாவட்டத்தில் 634 முன்பள்ளிகள் இயங்குகின்றபோதிலும் இவற்றில் 549 மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி ஜெரோமியைப்போன்ற சுத்தம் சுகாதாரம் பேணப்பட்ட ஒரு முன்பள்ளியைக்காணவில்லை. இதனால் இதை ஒரு முன்மாதிரி பாடசாலையாகவே பார்க்கிகின்றேன்.

கிழக்கு மாகாண ஆளுநர் எனக்கான நியமனக்கடிதத்தினை வழங்கும்போது பல ஆலோசனைகளைக் கூறினார். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் உள் மற்றும் வெளிச்சுத்தம், சுகாதாரத்தைப்பேணவும் பாலர்களுக்கு ஏற்ற மகிழ்ச்சியான சுற்றாடலை அமைக்கவும் நவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பணிப்புரை விடுத்தார். மிகமுக்கியமாக பிள்ளைகளது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் கண்காணிப்புக்குட்படுத்தப்படும்.
அதேவேளை அனைத்துப்பாடசாலைகளையும் ஒன்றிணைத்து பாரிய விழாவொன்றினை ஏற்பாடுசெய்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களை அவ்விழாவிற்கு அழைத்துவரும் எண்ணமும் எனக்கிருக்கிறது. அதன்மூலமாக எமது பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவேண்டும் என்றார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -