உடுநுவரையில் இடம்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு (PHOTOS)

நுஸ்கி முக்தார்-
உடுநுவரை ஐக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த "போதையற்ற உடுநுவரையை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளிலான விசேட நிகழ்ச்சி நேற்று (15) அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உடுநுவரை ஐக்கிய அமைப்பின் தலைவர் எம். இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்-மனார் தேசிய பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக அகில இலங்கை YMMA அமைப்பின் உறுப்பினர் திருமதி I.F.F. இஸ்ஸதீன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளான திருமதி மங்கலா மற்றும் எம். நவ்பத் ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
இதேவேளை, உடுநுவரையில் போதைப்பொருளை ஒழிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் உடுநுவரை ஐக்கிய அமைப்பின் பிரதித்தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் C.L.M . மன்சூர் உரையாற்றினார்.

உடுநுவரை ஐக்கிய அமைப்பானது உடுநுவரையில் போதையை ஒழிக்கும் நோக்கில் உடுநுவரையில் உள்ள கிராமங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -