எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்பது(09) பேர் கடந்தவாரம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்திருந்தனர்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு எதிராக 22குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை பிரதேச சபை உறுப்பினர்களினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரித்து ஒரு வாரகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநரினால்
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.