ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து ஊடகங்களை அச்சுறுத்தும் கருத்தாகும் -நாமல்

டகங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனதெரிவித்துள்ள கருத்து ஊடகங்களை அச்சுறுத்தும் கருத்தாகும்என ஹம்பாஜ்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ஊடகங்களுக்குவழங்கப்பட்டுள்ள சுதந்திரம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தகருத்து தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது அதற்கு பதில்அளித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனதெரிவித்துள்ள கருத்து ஊடகங்களை அச்சுறுத்தும்கருத்தாகும்.ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு கூறுவது ஊடகங்களைஅச்சுறுத்தும் செயலாகும்.அவர்கள் ஆட்சிக்கு வந்ததே இந்த ஊடகசுதந்திரத்தை பேசித்தான்.இதே விளையாட்டை ரனில்விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் செய்தார் ஊடகவியலாளர்களின்பெயரை கூறி பாராளுமன்றில்ஏசினார்.ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் தூற்றினார்.

இன்று ஜனாதிபதியும் இதே வேலையைத்தான்செய்கின்றார்.

ஹம்பாந்தோட்டையில் கடற்படை அதிகாரியினால் ஹிருதொலைக்காட்சி ஊடகவிலாளர் தாக்கபட்டார்.

அதே போல மற்றுமொரு ஆர்பாட்டத்தின் போது மற்றுமொரு ஊடகவியலாளர் பொலிஸ் உயரதிகாரியினால் கண்ணம் பிளக்கத்தாக்கப்பட்டார்.

இவற்றுக்கு எதிராக நீதி நிலை நாட்டப்பட்டதா.ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஜனாதிபதியால் இவற்றுக்கு பதில் அளிக்க முடியுமா என அவர்குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -