இஸ்லாமாபாத் சம்பியன் கிண்ண ரீ-20 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விலகல் ரீதியான போட்டியில் டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகம் அபார வெற்றியீட்டியது.
கல்முனை ரினோன் அணியினரை எதிர்த்து சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகம் மோதிய இப்போட்டி கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில்நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரினோன் அணித்தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ரினோன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டஸ்கர்ஸ் அணி ரிழ்வான் மற்றும் ஸவூக்கி ஆகியோரின் சிறப்பான ஆரம்பத்தின் உதவியுடன் வெற்றி இலக்கை 19.3 பந்துகளில் அடைந்து இச்சுற்றுத்தொடரில் அதி கூடிய இலக்கை வெற்றி கொண்ட அணியாக டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகம் பதிவாகியுள்ளது.
இவ்வணி சார்பாக அணித்தலைவர் ஆபாக் ஆட்டமிழக்காமல் 60(38) ஓட்டங்களையும் உப தலைவர் ரிழ்வான் 54(35) ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆபாக் 60 (38) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.