கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு விழா கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மருதமுனை,கல்முனை ஜமாத்தே இஸ்லாமி கிளையின் ஏற்ப்பாட்டிலும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அம்பாரை பிராந்தியப் பொறுப்பாளர் எஸ்.எச்.வதூத் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்விக்கு பிரதம அதிதியாக இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரசிட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கலந்து கொண்டதுடன் அவரினால் விசேட உரையும் இடம்பெற்றது
மேலும் நிகழ்வில் சிறப்புரை இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் பிரதித்தலைவர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.உசைர் (இலாஹி)அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
மேலும் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை முதலவர் ஏ.எம்.றக்கிப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துரைகளை தெரிவித்தனர்.
மேலும் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை மாநகர உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ் நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள்,புத்திஜீவிகள்,எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.





