கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் சாரணியா் இயக்கம் ஆரம்பித்து 100 வருடங்களை பூர்த்தியை முன்னிட்டு கல்லுாாியில் 48 பாடசாலைகளின் 500க்கும் மேற்பட்ட சாரனிய மாணவா்கள் கல்லுாாியில் 3நாட்கள் தங்கி நின்று சாரணியா் பயிற்சிகளில் ஈடுபடுகி்ன்றனா். இதற்காக சாரணியா் இயக்கம். முப்படைகளின் வீரா்கள், கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் சாரணியா்ஆசிரியா்கள் இணைந்து பல்வேறு பயிற்சிப் பட்டரைகளை இம் மாணவா்களுக்கு வழங்கி வருகின்றனா்
நேற்று வெள்ளிக்கிழமை(14) இலங்கை சாரணியா் இயக்கத்தின் விசேட ஆணையாளரும் மின்சக்தி அமைச்சின் மேலதிகச் செயலளாருமான மெரில் குணதிலக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ் நுாற்றாண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தாா். கல்லுாாியின் அதிபா் றிஸ்வி மரிக்காா், கல்லுாாியின் ஆளுணா் சபைத் தலைவா் பௌசுல் ஹமீட்டும் கலந்து கொண்டனா். நாட்டின் நாலா பாகத்திலும் இருந்து வந்த 48 பாடசாலை சாரணிய மாணவா்கள் ஆசிரியா்கள் பெற்றோா்களும் கலந்து கொள்கின்றனா்.




