வாசிப்பு வட்டம் அமர்வு


ஏறாவூர் 
ஏ.ஆர்.எம்.றிபாய்-
டந்த சனிக்கிழமை மாலை ஏறாவூர் சவுக்கடி கடற்கரையின் மணற்பரப்பில் வாசிப்பு வட்டம் ஏறாவூர் இன் பதினாறாவது அமர்வு இடம்பெற்றது. பேராசிரியர் கவிஞர் எம்.ஏ.நுஃமான் இவ்வமர்வின் பிரதான உரையாடலை நிகழ்த்தினார். இலக்கியம் தாண்டியும் பலதும் பத்துமாக சுவாரஷ்யமாக கதைப்போக்கு அமைந்திருந்தது. சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான காரணங்கள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகள், சமகால ஈழத்து இலக்கியப் படைப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் இலக்கிய அரசியல் என உரையாடல் விரிவடைந்து சென்றது.

அதிளவான தோழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.கொங்கிரீட்களும், வாகன இரைச்சல்களும் தலையிடியைத் தந்துகொண்டிருக்கும் மோசமான இவ்வாழ்வியலில் இவ்வாறான இயற்கையான இடத்தில் காற்றோட்டத்துடன் எல்லா வயதினரும் கலந்து உரையாடுவது ஒரு வகையான அலாதியை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இவ் அமர்வு கடற்கரையோரம் ஏற்பாடுசெய்யப்பட்டது

இவ்வமர்வில் குறிப்பாக முன்னால் வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் சேர், காத்தான்குடியிலிருந்து வருகை தந்த முஹம்மட், கல்குடாவைச் சேர்ந்த கவிஞர் நளீம், ஒவியர் ஸஜ்ஜாத் மற்றும் பாடகர் ஜமால்தீன் உட்பட கலந்து கொண்டனர்
மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வாசிப்புதிறன் அதிகரிக்கும் விழிப்புணர்வுகள் நடைபெறுகின்றது
தற்போது அதிகளவிலான இளைஞர்கள் இதில் பங்குபற்றுதலை அவதானிக்கும்போது
மாற்றம் எமது சமூகத்தை நோக்கி நகர்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -