திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருக்காமுனைப் பகுதியில் இரண்டு கிலோவும்,69 கிராமும்,680 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று திங்கட்கிழமை(23) உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் வெருகல் ஈச்சிலம்பற்று மற்றும் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 42,மற்றும் 45 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வயல் நிலத்தில் ஹேரொயின் போதைப்பொருளை புதைத்து வைத்திருந்த நிலையிலே ஹேரொயின் போதைப் பொருளை விசேட பொலிஸ் அதிரடைப்படையினரால் கைப்பற்றப்பட்டு சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சேருநுவர பொலிஸார் சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.