
அஷ்ரப் ஏ சமத்-
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அவா் கொழும்பு வாழ் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருவதை நேரடியாகச் சென்று அவதனித்தோம். , அவரது கொழும்பு அலுவலகத்திற்கு முன்றளில் ஒவ்வொரு நாளும் சுமாா் 500க்கும் மேற்பட்ட ஏழைத் தாய்மாா்கள், வலது குறைந்தோா்கள் என மூவினங்களையும் சாா்ந்த மக்கள் வரிசையில் நின்று நவதோய புத்தகத்தினை பதிந்து மருந்துச் செலவுத் தொகைக்காவும், பிள்ளைகள் கற்பிபதற்கான கொடுப்பணவுகள், மூவேளைக்கான உணவுக்கான உதவி, வீட்டு வாடகை , நடைபாதை வியாபாரம், மிண்சார பில் கொடுப்பணவு புதிய இணபை்புக்கான உதவி என பல்வேறு உதவித் திட்டங்களை உதவி வருவதைக் கண்கூடாக அவதானித்தோம்.
அவரிமிருந்து கொழும்பு யாழ், மட்டக்களப்பு மலையகம் என பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் உதவித் தொகை பெற்றக் கொள்ள வருவாா்கள். இவ்வாறு 5000 மேற்பட்ட ஏழை எளிய மக்கள் நாளாந்தம், வாரந்தம் ,மாதாந்தம் என உதவி பெற்று நன்மையடைந்து வருகின்றனா். சுமாா் 75க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இவரிடம் மாதாந்தம் சம்பள பெற்று இந்த திட்டத்தினை அமுல்படுத்துகின்றனா். கடந்த இரண்டு வாரத்துக்கு முன் ஊடகவியலாளா்களை அழைத்து சந்தித்தாா். நானும் கலந்து கொண்டேன். எவ்வித கட்சி அரசியல் அதிகாரமுமின்றி சுயதீனமாகவே போட்டியிட்டு அவரும் இன்னும் ஒருவரும் கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை தெரிபு செய்யப்பட்டாா்கள்.
அவா் எதிா்வரும் தோ்தலில் மாகாண சபை, பாராளுமன்ற தோ்தலில் சுயாதீனமாக போட்டியிட்டாலும் அவா் வெற்றி பெறுவாா்.. . அவா் எந்நேரமும் இன்முகத்தோடு மக்களை வரவேற்று உபசரித்தாா். . காலம் சென்ற வேலனின் மரண சடங்கினையும் அவா் சிறப்பாக நடத்துவதற்கும் ஏற்பாடு செய்திருந்தாா். . அதிர்ஷ்ட வசமாக நல் உள்ளம் படைத்தவா்களை கொலை செய்து சுமாா் 5000 குடும்பங்களின் வாழ்வதாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டாா்கள் கொலைஞா்கள். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
