ஏறாவூர் விவவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள முஹாஜிரீன் கிராமத்தில் காளான் அறுவடை விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
விவசாயப் போதனாசிரியை மு.ஹ. முர்ஷிதா ஷிரீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திரு M. பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, காளான் செய்கை சம்பந்தமான கலந்துரையாடலை நடாத்தி, அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
உதவி விவசாய பணிப்பாளர் திரு E. சுகுந்ததாசன் அவர்களும்,
பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய பயிற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.