திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரங்கள் மூன்றில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று சாரதிகளை திங்கட்கிழமை(17) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், வான்எல மற்றும் சூரியுபுர பகுதியைச் சேர்ந்த 48,50,மற்றும் 35 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர்கள் அனுமதிப்பத்திரமின்றி மூன்று உழவு இயந்திரங்களில் கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாயிக்கு மணல் ஏற்றிச் சென்ற வேளையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, சந்தேக நபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும், சந்தேக நபர்களை இன்று(18) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
