36 கோடி ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன் அரச பொது ஓய்வு விடுதி பண்ணை கடற்கரையில் அமைக்கப்படுகிறது


பாறுக் ஷிஹான்-

யா
ழில் மக்களின் நலன்கருதி பாரிய அரச ஓய்வு விடுதியொன்று அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்தார்.

குறித்த விடுதி யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ்.சிறைச்சாலைக்கு அருகில் கடற்கரை பகுதியை அண்டி குறித்த ஓய்வு விடுதி அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விடுதி 40 அறைகளை கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக அமையவுள்ளதோடு தற்போது முதற்கட்ட கட்டுமானங்கள் குறித்த கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் குறித்த ஓய்வு விடுதியின் கட்டுமானங்கள் 300 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு அழகிய இரண்டுமாடிக் கட்டடத்துடன் அமையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பண்ணை சுற்றுலாக் கடற்கரையை அண்டி அமையவுள்ள இவ் ஓய்வு விடுதியால் மிகுந்த பயனை சுற்றுலா வாசிகள் பெறுவதோடு யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் இவ் விடுதியானது பங்களிப்பை செய்யுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே மண்கும்பான் பகுதியில் அரசபொது ஓய்வுவிடுதி அமைக்கப்பட்டு செயப்பட்டுவரும் நிலையில் மக்களுக்கான அரச பொது விடுதி அமைக்கப்படுவது பாரிய நன்மைகளை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -