பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்றுமதில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற தனியாருக்குச் சொந்தமான பிக்கப் ரக வாகனத்தை ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சமிக்ஞையை கடந்த செல்வதற்காக சாரதி அதிவேகமாக செலுத்தியமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் சுற்றுமதிலுடன் காணப்பட்ட புத்தர் சிலையை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் தகர்த்தெறியப்பட்டதுடன் மதிலில் செதுக்கப்பட்டிருந்த யானைகள் சிலவும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன..
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரியவருகின்றது.