சங்கைக்குரிய கலாகொடாத்தென ஞானசார தேரர் ஜனாதிபதித் தூதுக்குழுவில் உறுப்பினராக இடம்பெறவில்லை


னாதிபதியின் ஜப்பானுக்கான அரசமுறை விஜயத்தில் சங்கைக்குரிய கலாகொடாத்தென ஞானசார தேரர் ஜனாதிபதித் தூதுக்குழுவில் உறுப்பினராக இடம்பெறவில்லை என்று ஐனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியடப்பட்டு;ள்ள அறிக்லக பின்வருமாறு:
ஜனாதிபதியின் ஜப்பானுக்கான அரசமுறை விஜயத்தில் ஜனாதிபதி அவர்களுடன் ஜப்பான் சென்றுள்ள தூதுக்குழுவினருடன் கலபொடஅத்தே ஞானசார தேரரும் இணைந்துள்ளார் எனத் தெரிவித்து தற்போது சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையெனவும் அவை முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை எனவும் தெரிவிக்கின்றோம்.

கலபொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி அவர்களின் விஜயத்திற்கு முன்னரே தனிப்பட்ட விஜயமாக ஜப்பான் சென்றுள்ளதுடன், ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்குவசிக்கும் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் ஜப்பானிலுள்ள பௌத்த விகாரைகளின் தலைமைத் தேரர்களுடன் ஞானசார தேரரும் சமுகமளித்திருந்தார்.
அந் நிகழ்வில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில புகைப்படங்களைக் கொண்டு, ஜனாதிபதி அவர்களோடு சென்றுள்ள தூதுக்குழுவில் கலபொடஅத்தே ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளார் என சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்திகளில் எதுவிதமான உண்மைகளும் இல்லை எனத் தெரிவிக்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -