இன்று நடைபெற்ற காரைதீவுப்பிரதேசபையின் முதலாவது அமர்வில்
திருவுளச்சீட்டு முறைமூலம் தவிசாளராக தமிழரசுக்கட்சி உறுப்பினர்
கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 3வது தேர்தலில் 4வது தவிசாளராக
கி.ஜெயசிறில் தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் எ.எம்.ஜாகீர் பகிரங்கவாக்களிப்பின் மூலம் ஒருவாக்கு வித்தியாசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இம்முதல் அமர்வு இன்று (27) செவ்வாய்க்கிழமை மு.ப.11.30மணிக்கு கிழக்கு
மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம் சலீம் தலைமையில் நடைபெற்றது. காரைதீவுப்பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது தேர்தலின்மூலம் தெரிவான 12 உறுப்பினர்களிடையே இத்தெரிவு நடைபெற்றது. சரியாக ஒரு மணிநேரம் இத்தெரிவு நடைபெற்றது. மூலாசனத்தில் ஆணையாளரும் அருகில் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமாரும் வீற்றிருந்தனர்.
தவிசாளர் தெரிவு:
தவிசாளர் தெரிவை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடாத்துவதென சபையிலுள்ள
12உறுப்பினர்களும் விருப்பம்தெரிவித்ததற்கமைவாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அங்கு கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆறுமுகம் பூபாலரெத்தினம் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்காக முன்மொழினப்பட்டன. வாக்கெடுப்பின்போது இருவரும் தலா ஆறு வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். அதன்காரணமாக தலைமைவகித்த ஆணையாளர் சலீம் திருவுளச்சீட்டின் மூலம் தவிசாளர் தெரிவுசெய்யப்படுமென்று கூறினார்.
அதன்படி திருவுளச்சீட்டை இருவரும் ஒரே நேரத்தில் எடுத்தனர். அதில்
ஜெயசிறிலுக்கு 1 என்ற இலக்கம் கிடைத்தமையினால் தவிசாளராகத்
தெரிவுசெய்யப்பட்டார். ஆ.பூபாலரெத்தினம் 0 என்ற சீட்டு கிடைத்ததனால்
தோல்வியடைந்தார். காரைதீவு பிரதேசபையை 3வது தடவையாகவும் த.தே.கூட்டமைப்பு வெற்றிபெற்று தவிசாளர் பதவியை தக்கவைத்துக்கொண்டது.
பின்பு ஆணையாளர் சலீம் தனது ஆசனத்தை புதிய தவிசாளர் ஜெயசிறிலுக்கு வழங்கினார். அடுத்த உபதவிசாளர் தெரிவு புதிய தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
உபதவிசாளர் தெரிவு:
இத்தெரிவுக்காக ரகசியவாக்கெடுப்பா பகிரங்கவாக்கெடுப்பா என்று
சபையோரிடம் கேட்டபோது தலா 6 பேர் பிரிந்து வாக்களித்தனர். அதனால் அங்கும் திருவுளச்சீட்டின்மூலம் வாக்கெடுப்பு முறைமை தெரிவுசெய்யப்பட்டது. அதனை ஜாகீர் எடுத்தார். அதன்படி பகிரங்க வாக்கெடுப்பு என அறிவிக்கப்பட்டது.
உபதவிசாளருக்கான தெரிவாக எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் ஏ.எம்.ஜாகீர்
ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. பகிரங்கவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது இஸ்மாயிலுக்கு 5வாக்குகளும் ஜாகீருக்கு 6வாக்குகளும் கிடைத்தன. ஆகவே ஏ.எம்.ஜாகீர் உபதவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த இரண்டு சபைகளிலும் உபதவிசாளராக த.வி.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க இம்முறை ஸ்ரீலஙகா சுதந்திரக்கட்சி உறுப்பினரொருவர் முதற்றடவையாகத் தெரிவாகியுள்ளார். அத்துடன் சபை அமர்வு நிறைவுபெற்றது. சபா மண்டபத்தினுள் குறிப்பிட்ட பிரமுகர்களை மட்டும் அனுமதித்து பூட்டிவிட்டனர். ஏராளமான பொதுமக்கள் ஆதரவாளர்கள் மண்டபத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.
த.தே.கூட்டமைப்பு பிரமுகர்கள்!
இம் முதலாவது அமர்விற்கு தமிழரசுககட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கோடீஸ்வரன் ஞா.சிறிநேசன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் கோ.கருணாகரன் உள்ளிட்ட அரசியல்
பிரமுகர்களும் சபா மண்டபத்தில் சமுகமளித்திருந்தனர்.
சபைக்குவெளியே பாதுகாப்பிற்காக பொலிசாரும் நிறுத்தப்பட்டிருந்ததைக்
காணமுடிந்தது. சபைமுன்றல் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 3202 வாக்குகளையும் சுயேச்சை-1 அணி 1985வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1684வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1522வாக்குகளையும் சுயேச்சை -2 அணி 829வாக்குகளையும் தமிழர்விடுதலைக்கூட்டணி 280வாக்குகளையும் ஜ.தே.கட்சி
203வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. அதன்படி த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும்
ஸ்ரீல.மு.கா. 2ஆசங்ம ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ்
1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
வட்டாரமுறையில் த.அ.கட்சி சார்பில் ச.நேசராசா த.மோகனதாஸ் சி.ஜெயராணி கி.ஜெயசிறில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக முஸ்தபா ஜலீல் ஸ்ரீல.சு.கட்சி சார்பில் ஏ.எம்.ஜாகீர் சுயேச்சை-2 அணி சார்பில் ஏ.ஆர்.எம். பஸ்மிர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
விகிதாசாரமுறையில் தெரிவுசெய்யப்படுபவர்களின் பெயர்கள் அந்தந்த
கட்சியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டபின்னர் கடந்த 9ஆம்
திகதிய வர்த்தமானியில் வெளியாகியது.
அதன்படி சுயேச்சை அணி1 சார்பில் ஆ.பூபாலரெத்தினம் இரா.மோகன் ஸ்ரீல.
சு.கட்சி சார்பில் மு.காண்டீபன் ஸ்ரீல.மு.கா.சார்பில்
எம்.எச்.எம்.இஸ்மாயில் எம்.என்.எம்.றனீஸ் ஆகியோரின் பெயர்கள் கடந்த 9ஆம் திகதிய வர்த்தமானியில் பதிவாகியுள்ளன.
மேலும் புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சுயேச்சை அணி1 என்பன
தலா இரண்டு உறுப்பினர்களைப்பெற்றதுடன் அ.இ.ம.காங்கிரசும் சுயேச்சைஅணி 2உம் தலா 1ஆசனத்தைப் பெற்றுள்ளன. அதாவது வழமையாக இருந்துவந்த இ.த.அ.கட்சி மு.கா என்பவற்றுக்கு மேலதிகமாக சபையில் சேர்ந்துள்ளன.