அரசாங்க வனப்பகுதியில் பலா மரங்களை வெட்டிய நபர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோட்டம்

க.கிஷாந்தன்-

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு அருகில் காணப்படும் அரசாங்க வனப்பகுதியில் எல்லைப்பகுதியில் காணப்படும் பலா மரங்களை சட்டவிரோதமாக இனந்தெரியாவர்கள் தரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து 18.03.2018 அன்று மாலை அவ்விடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸாரை கண்டு இனந்தெரியாதவர்கள் தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் தரிக்கப்பட்டிருந்த பலா மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். தப்பியோடிய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -