கிழக்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் மனோகரன் தகவல்!
காரைதீவு நிருபர் சகா-கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மாகாணமட்ட இடமாற்றசபை
மேற்கொண்ட வலய மற்றும் மாவட்ட ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் நேற்றுமுன்தினம் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகவலை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாண
கல்விப்பணிப்பாளர் k.மனோகரன் தெரிவித்தார். வலய மாவட்ட மட்ட இடமாற்றம் எப்போது நடைபெறுமென இலங்கைத்தமிழர்ஆ சிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
மாகாண கல்வித்திணைக்களத்தின் www.edudept.trade என்ற இணையத்தளவிலாசத்தில் பெயர் விபரங்களைக்காணமுடியும்.
இணையத்தளத்தில் 3பட்டியல்களை வெளியிட்டுள்ளோம். நேரடியாக உரியகாலம் பூர்த்திசெய்தவர்களுக்கான இடமாற்றம் பதிலீட்டுக்காக இடம்பெற்ற இடமாற்றப்பட்டியல் உரியகாலப்பகுதியை வெளிவலயத்தில்
பூர்த்திசெய்யாதவர்களின் பட்டியல் என 3 பட்டியல்களின் விபரம் பூரணமாக
வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட இடமாற்றலாகும் ஆசிரியர் பெயர்விபரங்கள்
அடங்கியபட்டியலின்படி நியாயமான காரணங்களிருப்பின் ஆசிரியர்கள்
மேன்முறையீடு செய்ய முடியும்.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்யமுடியும்.
பின்பு ஆசிரிய தொழிற்சங்கங்களின் இடமாற்றசபையூடாக மேன்முறையீட்டு
இடமாற்றசபையை நடாத்தி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
அடுத்தவணையிலிருந்து இவ்விடமாற்றம் அமுலுக்குவருமென்று அவர் மேலும் கூறினார்.