கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப்பின் கற்கை நிறுவகத்தினால் ( PGIM ) நடாத்தப்பட்ட சத்திரசிகிச்சைப் பயிற்சிக்கான தெரிவுப்பரீட்சைக்கு தோற்றி இப்பயிற்சி நெறிக்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர்எம்.என்.முஹம்மது நபீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்கமுவ அம்பன்பொல என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் குருநாகல் சியம்பலாஸ்கொடுவ தேசியபாடசாலையின் பழைய மாணவருமாவார்.
பேராதனை பல்கலைக் கழகத்தின் வைத்தியத்துறை சிறப்பு பட்டதாரியான இவர் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
முஹம்மது நஸார்தீன் செய்னப் ( ஆசிரியை) தம்பதிகளின் ஏக புதல்வரான இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர்தில்ரஸ் பானு ( கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை) வின் கணவருமாவார்.