அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ சேன அவர்கள் ..!
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
அன்பிற்கும் மதிப்பிற்குரிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களே
தங்களுக்கு நான் இம்மடலை வரைகின்ற நோக்கம் கடந்த செவ்வாய் (27) நள்ளிரவு கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டது தொடர்பான தெளிவான பதிவினை தாங்கள்
பெற்றிருப்பீர்கள் நான் கட்சி மதத்திற்கு அப்பால் ஒரு இலங்கையன் என்ற அடிப்படையிலும் கடந்த காலங்களின் மக்களால் வெறுக்கப்பட்ட மஹிந்த ஆட்சியை தோற்கடித்து இந்த நாட்டில் நால்லாட்சியினை உங்களதும் பிரதமரதும் தலைமையில் மலரச்செய்ய வேண்டும் என்ற அபிலாசையுடன் நாமும் எமது பிரதேச மக்களும் தங்களுக்கு வாக்களித்தோம் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நடந்த பெரும் அநியாயம் அதன் விளைவு தங்களை நாட்டின் கெளரவமான ஜனாதிபதியாக கொண்டுவந்த பாரிய பங்களிப்பை சிறுபாண்மை தமிழ் முஸ்லிம் மக்கள் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்
தொடர்ந்தும் இவ்வாறு எமது சமூகத்தின் மீதும் வணக்கஸ்தலங்கள் மீதும் அடாவடித்தனத்தை புரிகின்ற அநியாயக்காரர்கள் வெளிப்படையாக இந்நாட்டின் சட்டத்தை துச்சமேனும் மதிக்காது நடக்கின்றமை மனவேதனையளிப்பதுடன் இந்நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மீதுள்ள நம்பிக்கையை இலக்கச்செய்ய தூண்டுகின்றது நாட்டில் சட்டம் யாவருக்கும் சமன் என்ற அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் தண்டிக்காமல் இருப்பதனாலேயே தொடர்ந்தும் அவர்கள் இனரீதியான மற்றும் மத ரீதியான கலவரங்களை உருவாக்க ,முயற்சிக்கின்றனர்
குறித்த நடவடிக்கை தொடருமானால் நாட்டுமக்கள் தங்கள் மீதுள்ள நால்லாட்சியில் நம்பிக்கை இழந்தவர்களாக அபிலாஷைகள் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டவர்களாக மாறக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் நாம் பட்ட துயர் எம்மால் இன்றும் மறக்கமுடியாத நிலையில் நாடு பொருளாதார,கல்வி,கலாச்சார,சமூக ரீதியான பின்னடைவை சந்தித்து மீள நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றபோது குற்றவாளிகள் குழப்பவாதிகள் மீண்டும் நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை ஒத்ததான மதரீதியிலான யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்
எனவே தாங்களும் பிரதமரும் மிக அவசரமாக இந்த செயலை கட்டுப்படுத்தி நாட்டில் சரியான சமமான நீதியான சட்டத்தினூடாக பாரபட்சமின்றி அமுல்படுத்தினால் மாத்திரமே குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நாட்டை முன்னேற்றி ஒரு சுபிட்சமான நாடாக மாற்றமுடியும் என்பதை இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற அடிப்படையில் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்