காரைதீவு உள்ளிட்ட 15சபைகளின் எதிர்காலம் என்ன?


காரைதீவு நிருபர் சகா-
டந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் 340சபைகளில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் விரைவில் பதவியேற்கவிருக்கின்ற நிலையில் காரைதீவு உள்ளிட்ட 15சபைகளின் எதிர்காலம் என்ன என்று வாக்களித்த மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

. 'உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் 17128 பெண் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியிருந்தன. இந்தத் தேர்தலின் மூலம் 8721 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட்டார அடிப்படையில் 535 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். மேலும் 1991 பெண்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு அரசியல் கட்சிகள்இ சுயேட்சைக் குழுக்களால் மேலதிகப் பட்டியல்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். .
இதன்படி உள்ளூராட்சி சபைகளில் 2526 பெண் பிரதிநிதிகளின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. .மேலதிகப் பட்டியலின் மூலம் அதிகளவு பெண்களை ஐக்கிய தேசியக் கட்சியே நியமித்துள்ளது. .

15 உள்ளூராட்சி சபைகளில்இ பெண்களுக்கான 25 வீத இடத்தை ஒதுக்கீடு செய்ய முடியவில்ல. பருத்தித்துறை மன்னார் முசலி வெருகல் திருகோணமலை பட்டினமும் சூழலும் தம்பலகாமம் மூதூர் காரைதீவு திருக்கோவில் மண்முனை வனாத்தவில்லு கொட்டகல ஆகிய பி்ரதேச சபைகளிலும் திருகோணமலை மற்றும் கிண்ணியா நகரசபைகளிலுமேபெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியாதுள்ளது.
அதன்காரணமாக மேற்குறித்த சபைகளை ஆரம்பிப்பதில் தடங்கலேற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இத்தடங்கலுக்கு நாம் பொறுப்பாளிகளல்ல. இது தேர்தல் திணைக்களம் அல்லது தேர்தல் சட்டம் பொறிமுறை சார்ந்த பிரச்சினை. கலப்புமுறைத்தேர்தலில் இப்படியான சிக்கல்கள் வருமென்று கட்டாயம் எதிர்பார்த்திருக்கவேண்டும்.

குறித்த சபைகளின் கட்சிகளிடம் சட்டப்படி பெண் பிரதிநிதித்துவத்தைக்கோர முடியாத துர்ப்பாக்கியநிலை நிலவுகின்றது.அதேவேளை பெண்களின் 25வீதத்தை நிறைவுசெய்யவும் வேண்டும் என்றால் என்ன செய்வது? இதனை ஏதோஒருவகையில் சட்டததிற்கமைவாக நிவர்த்திசெய்யவேண்டும்.
எனவே ஏனைய சபைகள் ஆரம்பிக்கின்றபோது எமக்கான சபைகளும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -