பட்டியல் ஆசனத்தை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.


ஜெம்சித்(ஏ)றகுமான்
மருதமுனை.

டைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் மு.கா கோட்டையாக இருந்த கல்முனையில் தனக்கென 5 ஆசனம் பெற்று தனது இடத்தை தக்க வைத்துள்ளது அகில இலங்கை மக்கள் காங்ரஸ்.தேர்தல் முடிவுகளின் பிரகாரம் நற்பிட்டிமுனையில் ஓர் வட்டாரம் வெற்றி பெற்றுள்ளதுடன் பட்டியலில் நான்கு பேரும் இம் முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கல்முனைத் தொகுதியில் ஐ.தே.க (மு.க)சார்பில் போட்டியிட்டவர்களில் நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை 5ம் வட்டாரத்தில் போட்டியிட்டவர்கள் மாத்திரமே தோல்வி அடைந்திருந்தனர்.

நடைபெற்று முடிந்திருக்கும் கல்முனை மாநகரசபை தேர்தலில் அ.இ.ம.கா இனால் ஓர் வட்டாரம் வெல்லப்பட்டிருந்தாலும் கணிசமான வாக்குகள் பெறப்பட்டுள்ளது.கல்முனை தொகுதியில் இரண்டு வட்டாரங்களை மு.கா இழந்திருந்து அதிலும் குறிப்பாக மு.கா தனது இருப்பை எப்போதும் தக்க வைத்திருந்த மருதமுனை 5ம் வட்டாரம் தோல்வியடைந்தது சற்றேனும் எதிர்பார்த்திராத தோல்வியாகும்.மருதமுனை 5ம் வட்டாரத்தை மு.கா இழந்தமைக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அவ்வட்டாரத்தில் அ.இ.ம.கா கட்சி சார்பில் போட்டியிட்ட இளைஞன் சிபான் BM உதயமாகும்.மருதமுனை 5ம் வட்டாரத்தில் இளைஞன் சிபான் BM அ.இ.ம.கா சார்பில் களம் குதித்து கல்முனை மாநகரில் இரட்டை அங்கத்தவர் தொகுதி தவிர்த்து தோல்வியுற்ற மற்றைய தொகுதிகளுக்குள் அதிகூடிய (583) வாக்குகளை பெற்றுள்ளார். மருதமுனையின் மு.கா கோட்டை என வர்ணிக்கப்படும் 5ம் வட்டாரத்தை கனவான் அரசியல் செய்து மயிலின் ஆதிக்கத்தினை மூன்றில் ஒரு பங்காக உயர்த்திக்காட்டியுள்ளார்.

மருதமுனையின் ஏனைய வட்டாரங்களில் அ.இ.ம.கா கணிசமான வாக்கு வங்கியினை வைத்திருந்த போதும் 5ம் வட்டாரத்தில் அவ்வாறு இருந்திருக்கவில்லை. தனது பேச்சாற்றல் மூலமும்,செயலின் மூலமும் தனக்கென ஓர் இடம் பிடித்து இமாலய இலக்கை எட்டியுள்ளார் இளைஞன் சிபான் BM.ஆகவேதான், மாற்றத்தை நோக்கி வாக்களித்த 5ம் வாட்டர மக்களின் நிலை கருதி பட்டியல் ஆசனம் ஒன்றினை தலைமை , இளைஞன் சிபானுக்கு வழங்கவேண்டியது வட்டாரமக்களினதும், இளைஞர்களினது எதிர்பார்ப்பாகும். எதிர்கால கட்சியின் வளர்ச்சி கருதி கட்சியின் தலைமை இளைஞர்களை வலுவூட்ட வேண்டியமை காலத்தின் தேவையாகும்.

இளைஞர்கள் அரசியலில் வளர்த்துவிடப் பட வேண்டும் என்ற வகையில் மாற்றத்தின் குரலாகப்பரிணமித்த, எந்த எதிர்பார்ப்பும் இன்றி அ.இ.ம.கா வில் இணைந்து கொண்ட சிபான் BM இனை பட்டியலிக்கு தலைவர் சிபாரிசு செய்ய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -