சுதந்திரதின கொண்டாட்டத்தில் சாய்ந்தமருது விழாக்கோலம் பூண்டது.!!!



எம்.வை.அமீர், எம்.ஐ.எம்.அஸ்ஹர், யு.கே.காலித்தீன்-

சாய்ந்தமருதின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 70 வது சுதந்திரதின நிகழ்வானது பாரம்பரிய கலைநிகழ்வுகள் வீதி ஊர்வலம் துஆ பிராத்தனை என களைகட்டிக் காணப்பட்டது.

தங்களது எதிர்பார்புக்கள் நிறைவேறவில்லையென்ற மன ஆதங்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் 70 வது சுதந்திரதின பிரதான நிகழ்வில் வெளியிடப்படும், 1000 ரூபாய் நாணயத்தாளில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சாய்ந்தமருது பள்ளிவாசலின் முகத்தோற்றம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடும் நிகழ்வாகவும் ஆகமொத்தத்தில் சாய்ந்தமருது பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டு பிரதான நிகழ்வுகள் பள்ளிவாசல் முற்றலில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளையிடும் அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமுனா, ஊர்ப்பிரமுகர்கள்,உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெரும்திரளானோர் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் அதிதிகள் ஊர்மக்கள் புடைசூழ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இங்கு உரையாற்றிய சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கழிந்துள்ளதைக் கொண்டாடும் இலங்கைத் தாய் திருநாட்டின் மக்களுடன் அவர்களது மகிழ்வில் சாய்ந்தமருது மக்களும் இணைந்து மகிழ்வுறுவதாகவும் நாட்டில் நிர்வாகங்கள் பரவலாக்கப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களும் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற அவாவுடன் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொடுக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதியும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான எம்.எஸ்.எம்.முபாறக், சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு கௌரவத்தினையும் மதிப்பையும் வழங்கியுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர், நிதி அமைச்சர் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசுக்குக்கும் நன்றி தெரிவித்ததுடன்

இப்பளிவாசலின் முகத்தோற்றத்தை வடிவமைத்தவருக்கும் குறித்த தோற்றத்தை புகைப்படம் பிடித்து சாய்ந்தமருதை கௌரவப்படுத்தும் வித்தத்தில் நாணயத்தில் வரும் அளவுக்கு முன்கொண்டு சென்ற அந்த சகோதரருக்கும் ஊர்மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டில் வளமான சுபீட்சம் அமைதியான சுதந்திரமான ஒற்றுமையான சூழல் ஏற்படவும் விசேட துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் பொல்லடி பாவா பைத் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புகளுடன் சாய்ந்தமருது ஜுஆப் பெரிய பள்ளிவாசல் வரை இடம்பெற்றது

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசம் எங்கும் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதுடன் பிரதான வீதி உள்ளுர் வீதி வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வங்கிகள் பாடசாலைகள் வீடுகள் வாகனங்கள் போன்றவற்றில் பெரும் தொகையில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

இளைஞர்கள் தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் சாய்நதமருது பிரதான வீதி வழியாகவும் உள்ளுர் வீதி வழியாகவும் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிகள் மூலமாக ஊர்வலமாக சென்றனர்.








































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -