ஊரின் ஒரு சிலரின் அரசியல் நகர்வுகள் எமது ஊரை தனிமைப்படுத்துமா




முஹம்மட் சாஜிர்
சாய்ந்தமருது- 


ன்று ஒரு சிலர் தங்களது சொந்த விருப்பங்கள் நடைபெறவில்லை என்பதற்காக ஊர் மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் அடைவதற்கு முயற்சிக்கின்றார்கள் அவர்களின் நடைவடிக்கைகள் எமது ஊரை தனிமைப்படுத்தி விடும் என்ற அச்சம் சிந்திப்பவர்களுக்கு தெரியாமல் இல்லை

இன்று எந்த அரசியல்வாதிகளும் ஊரில் அரசியல் செய்ய இடம் இல்லை என்றால் எமது சமூக அரசியல் தலைவர்கள் ஊருக்கு வர கூடாது என்றால் நாளை ஊருக்கு அரசியல் கட்சிகளின் தேவை என்று ஒன்று வந்தால் யாரிடம் நாங்கள் போக வேண்டும் என்பதை இந்த ஊரை இன்று வழிநடத்துபவர்கள் மக்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும்,

மாநகர சபை உறுப்பினர்கள் மூலமாக எந்த அளவு வரை ஊரின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்,
எல்லோரும் வேண்டும் எல்லாரும் நமக்கு தேவை என்பதுதான் யதார்த்தம் இந்த யதார்ததை புரிந்துகொண்டு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை அரவணைப்பதன் மூலமாகத்தான் எங்களது ஊர் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியுமே தவிர அவர்களை எதிர்த்து நாங்கள் எதிர்வரும் மாநகர சபை தேர்தலில் 06 உறுப்பினர்களை வெல்வது மூலமாக எங்களது ஊரின் தேவைகள் முழுமையாக அடைந்து கொள்ள முடியுமா ..!
ஒரு மாநகர சபை உறுப்பினரின் அதிகாரம் என்ன ....!
அதிலும் எதிர்கட்சி உறுப்பினர்களின் அதிகாரம் எது வரை இருக்கும் ..!
பாராளுமன்றத்தில் இருக்கும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட மக்களுக்கு சேவை செய்ய முடியாத அரசியல் கலாச்சாரம் எமது நாட்டில் இருக்கும்போது மாநகர சபை எதிர் கட்சி உறுப்பினர்களினால் என்ன செய்ய முடியும் ..!

எமது நியாயமான கோரிக்கையை கூட குழி தோண்டி புதைக்க கூடிய நகர்வுகள் தான் இன்று எமது ஊரில் நடந்து கொண்டு இருக்கிறது,
எமது ஊருக்கு பாராளுமன்றம் என்றும் மாகாண சபை என்றும் மாநகர சபை என்றும் அரசியல் அதிகாரம் இருக்கும்போது எல்லாம் எமது ஊரின் நியாயமான கோரிக்கையை முன்னெடுத்து செல்ல யாரும் முன் வர இல்லை ஆனால் இப்போது எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத சந்தர்ப்பத்தில் நாங்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து நிற்கின்றோம்
அதற்காக நாங்கள் யாரும் அரசியவாதிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியது இல்லை எங்களுக்கு வாக்கு உரிமை இருக்கும் வரை நாங்கள் எந்த அரசியல்வாதிக்கும் அடிமை இல்லை எங்களது வாக்குரிமையின் மூலமாக அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர ஊருக்கு வேலி கட்டி நாங்கள் அரசியல் செய்வதால் ஊருக்கு எந்த நன்மையும் கிடைக்க போவது இல்லை,
அரசியல் கட்சிகள் வரும் தேர்தலில் தோல்வி கண்டால் அவர்கள் பத்தோடு பதினொன்றாக எமது ஊரையும் சேர்த்து விட்டு அடுத்த தேர்தல் காலத்தை நோக்கி பயணிப்பர்கள்,
எமது ஊரில் இருக்கும் 19000 வாக்குகளை பெற்று மாகாண சபை அதிகாரத்தை பெற்றுவிடலமா, அல்லது பாராளுமன்றத்தில் எமக்கான அதிகாரம் ஒன்றை பெற்றுவிடலமா அடுத்த ஊரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணித்தால் தான் எமக்கான எந்த உரிமையையும் பெறலாம் எந்த அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும் இந்த யதார்த்தம் தெறிந்தும் எமது ஊரில் இன்று ஒரு சிலர் யாரோ ஒரு கட்சியை அல்லது கட்சி தலைவரை மகிழ்ச்சிப்படுத்த எடுத்த முடிவுதான் எமது ஊர் இன்று போர்க்களாமக இருப்பதற்கு காரணம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -