சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று (24) மட்டு. அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அவருடன் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில்ஜெயசிங்க மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.
அவரது விஜயத்தின்போது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார்.
அங்கு அவர் புதிய நவீன சத்திரசிகிச்சைக் கூடத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
கடந்த 120வருட காலமாக சத்திரசிகிச்சைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த மிகப்பழைமையான வசதிகுறைந்த கட்டடத்தில் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்துவந்ததைப்பலரும் அச்சமயம் பாராட்டினர்.
அதன்பின்னர் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் கூட்டமும் நடைபெற்றது. அதில் வைத்தியசாலைகளின் தேவைகள் குறைபாடுகள் பற்றிக் கலந்துயாடப்பட்டது.
அங்கு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிக்கையில் தமது அமைச்சர் ராஜிதசேனாரத்னவின் தற்றுணிவின்பேரில் சுகாதாரத்துறைக்கு குறிப்பாக கிழக்கு சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 1000மில்லியன் ருபா கடந்தாண்டு ஒதுக்கியிருந்தார்.
அந்தநிதி கட்டடங்கள் நிருமாணிப்பதற்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது. நீங்கள் கேட்கும் சிரிசி ஸ்கன்செய்யும் இயந்திரம் உயர்மட்டத்துடன் பேசி பெறவேண்டியிருக்கிறது.
எமது ஆட்சியிருக்கும்வரை செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் செய்வோம் என்றார்.