தேசியபட்டியல் நியமனத்தில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்




மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்-
ண்மையில் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமன உறுப்பினர் தொடர்பாக நடைபெற்ற வரவேற்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது இவ்வூரின் நீண்டநாள் கனவும் என்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் இன்று நிறைவேற்றி வைக்கப்பட்டதையிட்டு நான் பெறுமைப்படுகிறேன்.

இருப்பினும் இப்பட்டியல் நியமனத்திற்கு பொருத்தமான கட்சியின் முன்னாள் மூத்த பொதுச் செயலாளரும் ஆரம்பகால உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களும் ஒருவராவார். அவர் இவ்விடயத்தில் எமது கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு பல விட்டுக்கொடுப்புகளை செய்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இக்கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்து இந்நிகழ்வை நடத்திவைப்பதையிட்டு நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருகிறேன். அத்துடன் அன்னாருக்கு பொருத்தமான பதவி ஒன்றையும் கட்சி விரைவில் வழங்கி வைப்பதாக தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி இக்கூட்டம் இக்கட்சியின் ஸ்தாபக பொதுச்செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற தேசிய பட்டியல் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம்.நசீர், விளையாட்டுதுறை பிரதியமைச்சர் எச்.எம்.ஹாரிஸ், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், ஹாரிப் சம்சுடீன் உட்பட இப்பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -