இம்முறை உள்ளூராட்சி தேர்தல் தொகுதிவாரி - விகிதாசார கலப்பு முறையில் நடந்து முடிந்துள்ளது.இம்முறையே எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ளது.


த்தேர்தல் முறை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொகுதிக்கு ஒரு பிரதிநிதி, விருப்பு வாக்கு சச்சரவுகள் இல்லாமை, வேட்பாளர்களுக்கு வீண்செலவுகள் குறைந்தமை என பல்வேறு நன்மைகள் இத்தேர்தல் முறையால் கிடைத்தது.
எனினும் சிதறி வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு இத்தேர்தல் முறை காரணமாக அமைந்ததுள்ளது. முன்னைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. இவ்வுயர்விற்கேற்ப சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் உயரவில்லை. குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் சமுகமும் வட கிழக்கினுள் வாழும் சிங்கள சமூகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க இந்த தேர்தல் முறையிலேயே எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படவுள்ளது. அதுவும் தற்போதைய மாகாண சபைகளின் உறுப்பினர் தொகை வரையறுக்கப்பட்டுள்ளதால் உறுப்பினர் தொகை அதிகரிக்காது. இந்நிலையில் மாகாண சபையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரலாம்.

எனினும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறையும் எனும் ஒரு காரணத்திற்காக மக்களிடையே வரவேற்பை பெற்ற இத்தேர்தல் முறையை எதிர்ப்பது உசிதமல்ல.
எனவே புதிய மாகாண சபை தேர்தல் முறையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உயர்த்த நாம் முயற்சி செய்தல் வேண்டும்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் அனுபவங்கள் இதனை எமக்கு இலகுவாக்கும்.
1 சிறுபான்மை பிரதிநிதித்தும் பாதுகாக்க முடியுமான வகையில் எல்லைகளை நிர்ணயம் செய்தல்.
மாகாண சபைகளின் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்ய ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வாணைக்குழு பல்வேறுதரப்பட்ட தரப்புகளின் கருத்துக்களின் படி ஓர் அறிக்கையை தயாரித்து எதிர்வரும் புதன்கிழமை வழங்கவுள்ளது. இவ்வாணைக்குழு முன் பல சிறுபான்மை சமூகப்பிரதிகளும் தமது பிரேரணைகளை முன்வைத்துள்ளனர்.
இவ்வெல்லை நிர்ணயம் வர்தமானியில் வெளியிடப்பட்டு மேன்முறையீடுகள் கோரப்படும். இதன்போது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க எல்லை நிர்ணய மேன்முறையீடுஙளை செய்யலாம்.
2 சிறுபான்மை பிரநிதித்துவத்திற்காக உருவாக்கப்படும் பல்அங்கத்தவர் தொகுதிகளில் போட்டியிடும் ஒவ்வொரு தரப்பும் பல்லின வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கல்.

சிதறி வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பல்அங்கத்தவர் தொகுதி மூலம் பாதுகாக்கலாம். முன்னைய பல்அங்கததவர் தேர்தல் முறையும் தற்போதைய தேர்தல் முறையும் முற்றிலும் மாறுபட்டது. முன்பு

பல்அங்கத்தவர் தொகுதியில் பல கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முடியுமாக இருந்தது. எனினும் தற்போது அவ்வாறில்லை. பல் அங்கதனதவ் தொகுதியில் கூடிய வாக்கு பெற்று வெற்றிபெறும் கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பல்அங்கத்தவர் தொகுதியில் ஒரே சமூகத்தை சார்ந்த வேட்பாளர்களை மாத்திரம் சில கட்சிகள்/சுயாதீனக்குழுக்கள் களமிறக்கியிருந்தன. இந்நிலையில் அவை அத்தொகுதியில் வெற்றிபெறுமிடத்து ஒரே சமூகத்தை சார்ந்தவர்களே வெற்றிபெறலாம். இதனால் பல்அங்கத்தவர் தொகுதி உருவாக்குவதன் நோக்கமே நிறைவேறமாட்டாது.
இந்நிலை மாகாணசபை தேர்தலில் ஏற்படாமல் இருக்க பல்அங்கத்தவர் தொகுதிகளில் போட்டியிடும் ஒவ்வொரு தரப்பும் பல்லின வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்படல் வேண்டும். இதனால் சிறுபான்மை கட்சிகள் தனித்துப்போட்டியிடும் போது சிக்கல்கள் எழலாம். அதைவிட சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் முக்கியமானது.

3 கட்டாய பெண் பிரதிநிதுத்துவ விகித்தினை குறைத்தல் வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு குறிப்பிட் விகிதம் வழங்கப்பட வேண்டும் என்பதனாலேயேசிறுபான்மை பிரதிநிதித்துவத்தை நியமன அங்கத்தவர் நியமிப்பால் உறுதி செய்ய முடியாமல் உள்ளது. பொதுவாக நியமன பட்டியலில் பெண் பிரதிநிகளையே முன்மொழிய வேண்டிய நலையில் கட்சிகள் உள்ளன.
இந்நிலை மாகாண சபையிலும் ஏற்பட்டால் சிறபான்மை பிரதிநிதித்துவத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

எனவே மகாண சபைகளில் கட்டாய பெண் பிரதிநிதித்துவம் வீதத்தனை குறைத்தல் வேண்டும்.
4 உள்ளூராட்சி சபைகளில் பெண் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க சட்ட ஏற்பாடுகள் செய்தது போன்று மகாண சபைகளில் சிறுபான்மை பரம்பல் விகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய சட்ட ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்க வேண்டும்.
மாகாண சபை எல்லை நிர்ணயம் 2/3 பெரும்பான்மையுடன் பாரளுமன்றத்தில் அங்கிகாரம் பெற வேண்டும். இந்த நேரத்தில் சிறுபான்மை உறுப்பினர்கள் மேற்படி விடயங்களை நிபந்தனையாக விதித்து அவற்றிற்கேற்றவாரு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தமது ஆதரவை வழங்கனால் மாத்திரமே மாகாண சபையில் சிறபான்மைபிரதிநதித்துவம் உறதிப்படுத்தப்படும்.

இதற்கு வடகிழக்கு சிங்கள மக்கள் பிரதிநிதிகளின் ஆதவையும்பெற்றுொள்ளல் அவசியம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -