மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 21 வது இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடை பெற்று முடிந்தது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் கலந்து சிறப்பித்தார்.
“பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளக்கும் ஒரு களமாக பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி நிகழ்வுகள் காணப்படுவதாகவும், தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பல வீரர்கள் பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகளில் இருந்தே இணங்கானப்பட்டுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் தமது உரையின் போது குறிப்பிட்டார்.
நஜிமியா,சம்சியா,கமரியா, என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இப்போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன இதன் போது 359 புள்ளிகளை பெற்று கமரியா நீல நிற இல்லம் முதலாம் இடத்தையும், 332 புள்ளிகளை பெற்று சம்சியா பச்சை நிற இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜிமியா சிவப்பு நிற இல்லம் 298 புள்ளிகளையும் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் மாணவர்களின் அணிநடை வகுப்பு,மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சிகள் மற்றும் பழைய மாணவர்களின் முட்டை மாற்றுதல் என்ற சுவாரசிய நிகழ்வுகள் மற்றும் மைதான நிகழ்வுகள் பல இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழல்களையும், நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசில்களையும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.