பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும்,ஆசிரியருமான ஜெஸ்மி.எம்.மூஸாவின் தந்தை எழுத்தாளரும் ,ஓய்வு பெற்ற ஆசிரியருமான சீனிமுகம்மது முகம்மது மூஸா(வயது 74)நேற்று (09-01-2018)காலமானார்.
இவர் 1944ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்தார் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்று ஆசிரியர் நியமனம் பெற்று நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் கல்வி மற்றும் சமையம் சார்ந்த மூன்று நூல்களையும் எழுதியுள்ளார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை பெரியநீலாவணை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.