கல்முனை மாநகரசபைக்காக 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.ஏ.பஷீரை ஆதரித்து 2018-01-06 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திதிப்பில் நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பள்ளிவாசலின் புனிதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை தவறான முறையில் உசுப்பேற்றி மற்றவர்களின் வீடுகளுக்கு கல்களை எறியும் கலாச்சாரத்தை சாய்ந்தமருது பள்ளிவாசல் அரங்கேற்றியுள்ளதை மிகுந்த வேதனையுடன் நோக்குவதாகவும் பாரம்பரியமிக்க சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, தற்போதுள்ள தலைமைத்துவம் இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்தகாலங்களில் நமது பிரதே எல்லைகளில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டபோது இங்குள்ள முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் குறித்த எல்லைகளுக்குச் சென்று அங்கிருந்த மக்கள் உறங்குவதற்காக தங்களது தூக்கங்களைத் தியாகம் செய்தவர்களை சிலர் துரோகிகள் என்கிறார்கள் ஆனால் நமது பிராந்தியத்துக்கு பலத்த அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகளை தாங்களது நடுவீட்டுக்குள் வைத்திருந்தவர்களை இன்று தியாகிகள் என்கின்றனர் இவைகளை இப்பிரதேச மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
சாய்ந்தமருதுக்கு தனியானதொரு உள்ளுராட்சிசபையின் அவசியத்தை உணர்ந்து அதனைப் பெறுவதற்காக போராடியவர்களும் போராடிக்கொண்டிருப்பவர்களும் தாங்களே என்று தெரிவித்த பஷீர், நமது ஊரின் முக்கிய தேவையை அடைந்துகொள்வதற்காய் அனைத்து முன்னெடுப்புகளிலும் முன்னின்றதாகவும் தெரிவித்தார். அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்ததுமுதல் அமைச்சர்களைச் சந்தித்ததுவரை அனைத்து செயற்பாடுகளிலும் முன்னின்றதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை தொடர்பான ஆவணங்கள் பிரதேச பாராளமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநகரசபையின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்களின் அனுசரணையுடனேயே தயாரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை அமையும் என்றும் அதனை தாங்களே பெற்றுக்கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை மலரவிருந்த சந்தர்ப்பத்தில் அதற்கு தடையாய் இருந்தவர்கள் றிஷாட் பதியூதீன் தலைமையிலான நமது ஊரைச்சேர்ந்த சிலரே என்று தெரிவித்த பஷீர், நமது சகோதரர்களுக்கு சொந்தமான சில இடங்களை மாற்று சமூகத்துக்கு சொந்தமானது என அமைச்சரிடம் கூறிவைத்திருந்ததாகவும் அதன்பின்னரே எதிர்க்கட்சித்தலைவருடனும் பேசவேண்டிய தேவையுள்ளது என்ற நிலைப்பாட்டுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் வந்ததாகவும் தெரிவித்தார்.
கல்முனையைப் பாதிக்காத வகையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையைப் பெறுவதனூடாக மட்டுமே எங்களது ஊர்களுக்கிடையேயான அன்னியோன்யம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்த பஷீர், எங்களது அடையாளம் அழிந்துபோக துணைபோய் அந்த அவப்பேரை எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதை கல்முனையுடன் இணைத்து தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு முழுக்காரணமும் பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவே என்று தெரிவித்த பஷீர், இந்த விடயங்களை முன்னாள் அமைச்சர் மன்சூரின் மகள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பள்ளிவாசலால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் எந்த அரசியல்கட்சிகளையும் சாராதவர்களை தேர்தல்களில் களமிறக்குவோம் என கூறிவிட்டு மயில் கட்சியின் நேரடி செயற்பாட்டாளர்களையும் ஐக்கிய தேசியக்கட்சியின் நேரடி செயற்பாட்டாளரையும் பட்டியலில் போட்டிருப்பது அவர்களது பிரகடனத்தை மீறும் செயலாக தெரியவில்லையா? என்றும் கேள்வியெழுபினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்பதனூடாக மட்டுமே எங்களது எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த பஷீர், வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாது சிந்தித்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் மற்றும் கட்சியின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுதீன்., உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் வேட்பாளருமான ஏ.சி.யஹ்யாகான், சாய்ந்தமருது அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.நஸார்டீன், வேட்பாளர்களான எம்.எம்.எம்.பாமி,ஏ.எம்.முபாறக், காரைதீவு பிரதேசசபை வேட்பாளர் இஸ்மாயில், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பறக்கத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 ஆம் பிரிவு அமைப்பாளர் எம்.எஸ்.அஹமட் உள்ளிட்டவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.