முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளினால் பாவிக்கப்பட்ட குண்டு துளைக்காத 25 ஆடம்பர வாகனங்களை கொழும்பு துறைமுகத்துக்கு அப்பாலுள்ள ஆழ்கடலில் மூழ்கடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு கடலில் மூழ்கடிக்கத் தீர்மானித்துள்ள வாகனங்களில் சிலவற்றை திருத்துவதற்கு பல இலட்சம் ரூபா செலவாகுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதிமிக்க இந்த வாகனங்கள் உரிய காலத்தில் திருத்தப்படாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
