மதத் தலைவர்கள் மத ஸ்தலங்களை கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. மீறும் பட்சத்தில் மதத் தலைவர்களின் குடியுரிமை4 வருடங்களுக்கு மறிக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என உதவி தேர்தல்ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தெரிவித்ததுடன் மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறும் உத்தரவிட்டார்.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (06) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளர் திலினவிக்கிரமரட்ன, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், வேட்பாளர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்துக் கோவில், கிறிஸ்தவ தேவாலயம், பண்சாலை, பள்ளிவாசல்கள் போன்றவற்றின் மதத் தலைவர்கள், மத ஸ்தானங்களை கொண்டுதேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தேர்தல்கள் சட்டத்தின் 81 பிரிவின் இது குற்றமாகும். மீறிவோருக்கு குடியுரிமை 4 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட முடியாது. அத்தோடுபள்ளிவாசல் உள்ளேயும் வெளியேயும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் செயற்பட முடியாதுஅத்துடன் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட காரியாலயங்களைக் கூட திறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய கண்டிப்பான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். இதற்கு கட்டுப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடக்க வேண்டும்அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.