ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத்தின்கீழ் இயங்கி வரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தில் 2018 ம் ஆண்டிக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 6 ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம். முஸ்தபா தப்லீகி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை மகிழ்விக்க கலாபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் கலைகலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றது.
இம்முறை கலாபீடத்தில் ஐம்பது மாணவர்கள் இணைந்து கொண்டனர் இதில் இருபத்தியேழு மாணவர்கள் தந்தையை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


