எம்.என்.எம் அப்ராஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் 2மாடிக்கான பல் தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா(6-1-2018) இன்று கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் அருகாமையில் இடம்பெற்றது. அத்துடன் கல்முனை மத்திய வீதிக்காக அடிக்கல் நடும் நிகழ்வும் இடம் பெற்றது.
இவ் நிகழ்விற்க்கு பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார்.மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் தலைவர் கலாநிதி எஸ்.எம் ஏ. அஸீஸ் அவர்களும் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.




