கொள்ளுப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பும் - அரசியல்வாதியும்

FilePIC
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கொள்ளுப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில், இன்னமும் இரகசியமாக பாதுகாக்கப்படும் அறிக்கையில், மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்று குறைந்தபட்சம் ஒன்பது அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஊகங்கள் உலாவுகின்றன. எனினும், இதனை சுதந்திரமான உறுதிப்படுத்த முடியவில்லை.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் இந்த பிணைமுறி மோசடி மூலம் சட்டவிரோதமாக பில்லியன்கணக்கான நிதி ஆதாயத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

அதுமாத்திரமன்றி, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாகவும் இந்த அறிக்கையில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் கொள்ளுப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாளுக்கு முன்னதாக பகிரங்கப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும், பெப்ரவரி 10ஆம் நாள், உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Source :lankasri 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -