தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் யாரையும் விமர்சிக்க வேண்டாம் - ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், சனிக்கிழமை (30) மாலை புத்தளத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் இப்லால் அமீனின் தாயார் நேற்று வெள்ளிக்கிழமை வபாத்தானார். இந்த நிலையிலேயே அமைச்சர் குறித்த அமைப்பாளரின் வீட்டுக்கு விஜயம் செய்தார். அமைச்சருடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவி, கட்சியின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் உட்பட உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொன்டனர்.

புத்தளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, புத்தளம் நகர சபைக்கு மக்கள் காங்கிரஸ், ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவதால் வெற்றி இலக்கை அடைய மிகவும் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்ற வேண்டும் எனவும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது யாரையும் விமர்சிக்காது, அபாண்டங்களை சுமத்தாது மிகவும் அமைதியான முறையில் கட்சியின் வெற்றிக்காக செயற்படுமாறும் ௯றியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -