-முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன்-
முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை அறுக்கின்ற செயற்பாட்டை பள்ளிவாசல் தலைமை செய்ய முனைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுதீன் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபைக்காக 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீரை ஆதரித்து 2018-01-06 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திதிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மிக மூத்த பிரச்சையான நாங்கள் மிகவும் மதிக்கின்ற வை.எம்.ஹனிபா அவர்கள் சாய்ந்தமருதில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைக்கு தலைமை வகுக்கின்றார் என்பதை நினைத்து கவலையடைவதாகவும் தெரிவித்தார். கடந்தகாலங்களில் எங்களுடன் மிகுந்த நெருக்கத்தைப் பேணிவந்த அவர், சிலரது தவறான வழிநடத்தல்களின் காரணமாக எவ்வளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணரமுடிவதாகவும் தனிப்பட்ட முறையில் தானும் வை.எம்.ஹனிபாவும் செயலாளர் ரோசனும் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதையும் அவர்கள் மறந்து விட்டது மிகுந்த மனவருத்தத்தை தருவதாகவும் தெரிவித்தார்.
தனது நலன்களில் அவர்கள் தொடர்ந்து அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்தவர்கள் என்றும் விசேடமாக ரோசன், தனது தந்தை அரசியல் செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தனது வீட்டுக்கு ஒவ்வொருநாளும் வருபவராக இருந்ததாகவும், மிக நீண்ட காலமாக சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு மாதத்தில் ஒருமுறையாவது தொழுகைக்கு வருபவராக இருந்ததாகவும் பள்ளிவாசலுக்கும் கூடியிருந்த சிலருக்கும் செய்யப்பட்டுள்ள மூளைச்சலவையின் காரணமாக தன்னை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே பார்த்ததாகவும் நானும் இந்த மண்ணின்மீது உண்மையாகவே அக்கறை கொண்டவன் என்பதை மறந்து விட்வர்கள் போல் பள்ளிவாசலுக்குள் செல்ல அனுமதி மறுப்பவர்கள் போல் கேள்விகள் கேட்டதாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளா விட்டாலும் தனது மனதை நோகடித்துக்கொண்டிருக்கும் விடயம் தான் மிகவும் மதிக்கின்ற வை.எம்.ஹனிபாவோ செயலாளர் ரோசனோ ஒரு தொலைபேசி அழைப்பாவது எடுக்க வில்லை என்பதுதான் என்றும் தெரிவித்தார்.
இவ்வளவு தூரம் இவர்களது மனனம் இவ்வளவு விகாரமடைவதற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னால் யார் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அலசி ஆராயவேண்டியுள்ளது. சிறிய காலத்துக்குள் இடம்பெற்றுள்ள பெரிய மாற்றமாக இருந்துகொண்டிருக்கின்றது. இது ஒரு பெறும் சதி. கல்முனையில், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை வழங்கக்கூடாது என்று சொல்பவர்களும் கல்முனைக்கு எது நடந்தாலும் பரவாயில்லை சாய்ந்தமருதுக்கு சபை மட்டுமே தேவை என்று கூறும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் இணைந்திருக்கின்ற அந்த ஊழல் மந்திரியின் செயற்பாடுகளே இது என்றும் தெரிவித்தார்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாதே இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பிரதான காரணம் என்று தெரிவித்த சட்டத்தரணி ஆரீப், அவர் தற்போது அந்த அணியில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் இந்த இரண்டு ஊர்களையும் தூண்டி விட்டு அதில் அவர்கள் குளிர்காய முனைவதாகவும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸை சாய்ந்தமருதில் இருந்து அழிப்பதற்க்கு சில பண முதலைகள் முயல்வதாகவும் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தை சாய்ந்தமருது மக்கள் அழிக்க காரணமாக இருந்தார்கள் என்ற வரலாற்று அவப்பெயரை இந்த மக்களின் தலையில் போடுவதற்க்கு சிலர் முனைவதாகவும் இது விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிழக்குமாகாண சபைக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறவேண்டும் என்ற காரணத்துக்காக தான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டதாகவும் அதனூடாக முஸ்லிம் காங்கிரஸுக்கு மேலும் வலுவூட்டியதாகவும் தெரிவித்தார்.
மாயக்கல்லி மாலையில் சிலை வைத்தது முஸ்லிம் காங்கிரஸ் என்று சில அரைகுறைகள் நாக்கூசாமல் கூவித்திரிவதாகவும் மேலதிகமாக ஒரு கல்லைக்கூட வைப்பதற்கு தாங்கள் தடையாக இருப்பதை இவர்கள் அறியாமல் இல்லை என்றும் தெரிவித்தார்.
கல்முனை என்ற அடையாளத்தை உருவாக்குவதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.காரியப்பர் மற்றும் எம்.சி.அஹமத் மருதமுனையைச் சேர்ந்த மசூர் மௌலான போன்றோர் ஆற்றிய அர்ப்பணிப்புகளை யாரும் மறக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.
கல்முனை என்ற முகவெற்றிலை எல்லோருக்கும் பொதுவானது என்றும் அதற்கு கல்முனை ஆட்கள் மட்டும் உரிமைகோரமுடியாது என்றும் கல்முனைக்கு பிரச்சினை என்றால் எல்லோரும் ஒன்றுபடவேண்டும் எண்டும் கேட்டுக்கொண்டார்.