அப்துல்சலாம் யாசீம்-
முதல் தடவையாக இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மொறவெவ பிரதேசத்தில் களமிறங்கியுள்ளதாகவும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் கோோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (08) காலை ரொட்டவெவ பொது இடமொன்றில் நடை பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இக்கிராம மக்களினால் பல குறைபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க முடியாதெனவும் இத்தேர்தலின் போது பிரதிநிதியொருவரை நியமிக்குமாறும் அவர் கூறினார்.
அத்துடன் இன்றைய தினம் ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹூதா ஐூம்ஆ பள்ளி வாயல் கட்டிட நிதிக்காக ஆறு இலட்சம் ரூபாயும். பாடசாலை கதிரைகள் வாங்குவதற்கு இரண்டு இலட்சமும்' மையவாடி அபிவிருத்திக்காக இரண்டு இலச்சம் ரூபாய் நிதியும் ஒதிக்கீடு செய்யப்பட்டது.
இதில் கிராம இளைஞர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
