மூன்று வருடங்களில் ஐயாயிரம் வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடியாது - அமைச்சர் திகாம்பரம் கேள்வி?


க.கிஷாந்தன்-

எனக்கு அதிகாரம் கிடைத்த மூன்று வருட காலப்பகுதியில் ஐம்பது நூறு என வீடுகள் கட்டி ஐயாயிரம் வீடுகளை கட்டியுள்ளேன். எனக்கு மூன்று வருட காலப்பகுதியில் 5000 வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 17.01.2018 அன்று மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று வருடங்களில் ஐயாயிரம் வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடியாது - அமைச்சர் திகாம்பரம் கேள்வி?

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பு ஒரு தேயிலை செடியினை பிடிங்கினாலும் உடனே தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் வேலையினை நிறுத்தி விடுவார்கள். ஆனால் இன்று அந்த நிலையில்லை. தோட்ட நிர்வாகம் நாம் கேட்டவுடன் காணிகளை பெற்றுக்கொடுகிறது.

இன்று நாங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு உறுதியுடன் வீடு கட்டி கொடுகின்றோம். இன்று ஒரு சிலர் கூறிவருகிறார்கள். தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி கொடுத்தால் விற்றுவிடுவார்கள். என்று ஆனால் இன்று தோட்ட தொழிலாளர்கள் அந்த நிலையில் இல்லை தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார்கள்.

அவர்கள் அதனை காப்பாற்றிக்கொள்வார்கள் முன்பு இருந்தவர்கள் இன்னும் ஒன்றையும் சொல்லி வருகிறார்கள். கிராமங்களை உருவாக்கிக்கொடுக்க இருந்தோம். இவர்கள் ஏழு பேர்ச்சஸ் வாங்கி விட்டார்கள் என்று காலம்காலமாக எமது தோட்ட தொழிலாளிகளை ஏமாற்றியே வந்துள்ளார்கள்.

என்னை பொருத்த வரையில் தோட்ட தொழிலாளர்கள் கௌரவமாக வாழ வேண்டும். அண்மையில் கூட அமைச்சரவையில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி வழங்க தேவையில்லை. போமிட் கொடுத்தால் போதும் அவர்கள் விற்றுவிடுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். எமது தொழிலாளர்கள் அவ்வாறு இல்லை. அவர்கள் முன்பு போல் யானைக்கு மாத்திரம் வாக்களிபவர்களாக இருந்திருந்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் எவ்வாறு அன்னத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.

எனவே அவர்களுக்கு நிலையான உறுதி பத்திரமே கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதனை கேட்ட பிரதமர் இப்போது எவ்வாறான உறுதிகளை வழங்குகிறீர்களோ அவ்வாறே செய்யுங்கள் என்றார்.

பிரதமர் ஓர் நல்ல மனிதர் அவர் ஒரு போதும் இனவாதம் பேச மாட்டார். எனவே யானைக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து செயற்ப்படுத்துவோம். இல்லையேல் லயத்து வாழ்க்கை மீண்டும் ஆரம்பமாகும் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -