சரித்திரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம் - ரிஷி செந்தில்ராஜ்


ரித்திரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம் என மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

வெற்றிப் பயணத்தின் தொடக்கம் இன்றிலிருந்து ஆரம்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மலையக தேசிய முன்னணி இம்முறை இணைந்து போட்டியிடுகின்றது.

அந்த வகையில் மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையில் நேற்றைய தினம் நுவரெலியாவில் , நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்பு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலாநிதி ரிஷி செந்திராஜ்.....

புதியதொரு மாற்றத்திற்கான சரித்திரப் பாதையில் அனைவரும் கை கோர்த்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மலையகத்தின் வரலாற்று காலம் முதல் நிலவி வரும் மரபு ரீதியான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றியமைத்து புதியதொரு சரித்திரம் படைக்கும் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன்களை முதன்மை நோக்கமாகக் கொண்ட மலையக தேசிய முன்னணி, இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி சரித்திர சாதனை படைப்பது தின்னம்.

வாக்குறுதி அரசியலுக்கு அப்பாலான செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கவும் மக்களுடன் மக்களாக அரசியல் சேவகம் செய்யும் அர்ப்பணிப்புடனும் கட்சி இம்முறை தேர்தல் சவாலை எதிர்நோக்குகின்றது என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மலையக தேசிய முன்னணி வேட்பு மனுக்களை தாக்கல் செய்த போதான படங்கள் .............







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -