2017-12-04. கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு முதலாம், இரண்டாம்,மூன்றாம் குலனி போன்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதிகளின் அவல நிலையே இது!இவ்வீதியினூடாக பயணம் மேற்கொள்ளும் பிரதேச மக்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வீதியின் அவல நிலை குறித்து பிரதேச மக்கள் கிராம மக்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேச சபையில் முன்னால் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருந்தும் அவர்களிடம் இவ்வீதிகளின் நிலை குறித்து முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது மழை காலமாகையால் வீதியின் நடுவே பள்ளமும் படுகுழியுமாக,சேரும் சகதியும் நிறைந்ததாக காணப்படுகின்றது. இவ்வீதிகளினூடாக பயணம் செய்கின்ற மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலே செல்கின்றனர். இவ்வீதியின் நிலையினை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் பேராறு முதாலாம்,இரண்டாம்,மூன்றாம் குலனிகளின் பிரதான வீதிகளை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

