எம்.ரீ. ஹைதர் அலி-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.12.09ஆம்திகதி நடைபெற்றது.
பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு சுயதொழில் உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கபட்டது.
காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் இத்தகைய பல்வேறுபட்ட வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


