






அஷ்ரப் ஏ சமத்-மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேல் மாகாண மட்டத்தில் தமிழ் தினம், இலக்கியம், இஸ்லாமிய தினங்களில் வெற்றி பெற்ற மாணவா்களது விருது வழங்குதல் ” சிலம்பு” சஞ்சிகை வெளியீடு மேல் மாகாண சிறந்த பாடசாலைகள், சிறந்த ஆசிரியா்கள் கௌரவிப்பு ” மாணவாகள் கலை நிகழ்வுகள் மேடைஏற்றம், போன்ற நிகழ்வுகள் அணைத்தையும் கொண்ட ஒரு நிகழ்வாக , மகுடம் ” 2016 எனும் தலைப்பில் நேற்று(10) வெள்ளவத்தை இராமக்கிருஸ்ணன் மண்டபத்தில் தமிழ்ப்பிரிவு உதவிப் பணிப்பாளா் ஆர். உதயகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுணா் கே.சி லோகேஸ்வரன், கலந்து சிறப்பித்தாா். அத்துடன் மேல் மாகாணத்தின் மாகாண சபை உறுப்பிணா்கள் மொஹமட் பாயிஸ், கே.ரீ. குருசாமி பேராசிரியா் சந்திரசேகரன், பேராசிரியா் யோகேஸ்வரன், கல்வி அதிகாரிகள் மேல் மாகாண பாடசாலை அதிபா்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
சகல துறைகள், கல்வியில் 90 வீதத்திற்கு மேல் சாதனை படைத்த பாடசாலையாக கொழும்பு நல்லயன் கல்லுாாி தெரிவு செய்யப்பட்டது. அப்பாடசாலைக்கு 3 இலட்சத்து 65ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணனி தொழில்நுட்ப சாதனங்கள் லயன்ஸ் கழகத்தினால் பரிசாக வழங்க்ப்பட்டது.
அத்துடன் வெள்ளவத்தை சைவமங்கையா் பாடசாலையும். களுத்துறை தமிழ் வித்தியாலயமும் சிறந்த பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் சிறந்த அழகான, சூழல் சுத்தம், வடிவமைப்புக்களில் கம்பஹா களுத்துறை மாவட்டங்களில் 3 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. அத்துடன் உயா்தரம் .சாதாரணப் பரீட்சையில் 90 வீதத்திற்கு மேல் தமது பாடத்தை கற்பித்து சிறந்த பரீட்சை முடிவுகளை கொண்டுவர உதவிய ஆசிரிய ,ஆசிரியா்கள் மேடையில் வைத்து ஆளுனாினால் கௌரவிக்கப்பட்டனா ் இந் நிகழ்வுக்கு வசந்தம் தொலைக்காட்சி அனுசரனை வழங்கியது.