எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதில் பிரபல்யமிக்க முன்பள்ளி பாடசாலையான பிர்ளியன்ட் கிட்ஸ் கல்லூரி தனது கல்வி நிலையத்தில் கல்விகற்று 2017 ஆம் ஆண்டில் வெளிச்செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவையும், அந்த மாணவர்கள் பங்குகொண்ட கலைநிகழ்வையும் 2017-12-03 ஆம் திகதி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் கல்வி நிலையத்தில் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றபீக் தலைமையில் நடாத்தியது.
மாணவர்களின் ஆடல் பாடல்கள் நிறைந்த குறித்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் நிதி மற்றும் கணக்கியல் பிரிவின் துறைத்தலைவர் கலாநிதி ஏ.எல்.அப்துல் றவூப் பிரதம அதிதியாகக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக முன்பள்ளி பாடசாலைகளின் கள உத்தியோகத்தர் அஷ்செய்க் ஐ.எல்.எம்.அனஸ் கலந்துகொண்டதுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கத்தை அதிர வைத்த நிலையில் பெற்றோர்கள் பார்வையாளர்கள் என சபை நிறைந்து காணப்பட்டது.